இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் மக்கள் செல்வன் ? - விரைவில் படப்பிடிப்பு


இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் மக்கள் செல்வன் ? - விரைவில் படப்பிடிப்பு
x
தினத்தந்தி 23 Oct 2024 10:16 AM GMT (Updated: 23 Oct 2024 10:35 AM GMT)

விஜய் சேதுபதியும், இயக்குனர் பாண்டிராஜும் இணைந்துள்ள முதல் படம் இதுவே. இதனால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை ,

தமிழ் சினிமாவின் முக்கியமான கமர்ஷியல் இயக்குனர்களில் ஒருவர் பாண்டிராஜ் .'பசங்க', 'வம்சம்', 'மெரினா', 'கடைக்குட்டி சிங்கம்', 'நம்ம வீட்டு பிள்ளை', 'எதற்கும் துணிந்தவன்' உள்ளிட்ட படங்களை இயக்கிய பாண்டிராஜ் தற்போது புதிய படப்பிடிப்பில் இறங்கியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் பகுதியில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் பூஜை நடைபெற்று உள்ளது.

இதில் கதாநாயகியாக தேசிய விருது பெற்ற நடிகை நித்யா மேனன், நடிகர் யோகி பாபு உட்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்தை சத்யஜோதி பிலிம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பை திருச்செந்தூர் மற்றும் மதுரையில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படம் குறித்த முழு விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படம் எனது பாணியில் குடும்பப் படமாக அமையும். இளைஞர்களுக்கு பிடித்த படமாகவும் இது இருக்கும் என்று இயக்குனர் பாண்டிராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும் விஜய் சேதுபதியும், இயக்குனர் பாண்டிராஜும் இணைந்துள்ள முதல் படம் இதுவே. இதனால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இறுதியாக இவர் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'நம்ம வீட்டு பிள்ளை' ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.


Next Story