பராமரிப்பு பணி: ஈரோடு-ஜோலார்பேட்டை ரெயில்கள் பகுதியாக ரத்து

ரெயில்கள் இயக்கத்தில் மாற்றம் செய்து ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சூரமங்கலம்,
திருப்பத்தூர்- ஜோலார்பேட்டை ெரயில் வழித்தடங்களில் சிக்னல்கள் மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான பல்வேறு பணிகள் நடந்து வருகிறது, இதையொட்டி ரெயில்கள் இயக்கத்தில் மாற்றம் செய்து ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி ஈரோட்டில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்படும் ஈரோடு - ஜோலார்பேட்டை ரெயில் (56108) இன்று மற்றும் மார்ச் 19 ஆகிய தேதிகளில் திருப்பத்தூர் - ஜோலார்பேட்டை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் ஈரோட்டில் இருந்து திருப்பத்தூருக்கு மட்டும் இயக்கப்படும்.
இதேபோல் ஜோலார்பேட்டையில் இருந்து மதியம் 2.45 மணிக்கு புறப்படும் ஜோலார்பேட்டை - ஈரோடு ரெயில் (56107) நாளை இன்று மற்றும் 19 ஆகிய தேதிகளில் ஜோலார்பேட்டை - திருப்பத்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது, இந்த ரெயில் திருப்பத்தூரில் இருந்து ஈரோடு வரை இயக்கப்படும் என சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.