தாமிரபரணி நதியின் தற்போதைய நிலை குறித்து மதுரை ஐகோர்ட்டு கிளை நீதிபதிகள் நேரில் ஆய்வு
தாமிரபரணி நதியின் தற்போதைய நிலை குறித்து மதுரை ஐகோர்ட்டு கிளை நீதிபதிகள் இன்று நேரில் ஆய்வு செய்தனர்.
நெல்லை,
தமிழகத்தில் வற்றாத ஜீவநதியாக ஓடிக்கொண்டிருக்கும் தாமிரபரணி நதியில், பல்வேறு கழிவுகள் கொட்டப்படுவது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் கோர்ட்டில் பல்வேறு வழக்குகளை பதிவு செய்துள்ளனர். அந்த வகையில் மதுரை ஐகோர்ட்டு கிளையில் இது தொடர்பாக பதிவு செய்யபப்ட்ட வழக்கின் அடிப்படையில், நீதிபதி புகழேந்தி, நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன் ஆகியோர் தாமிரபரணி நதியின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்வதற்காக இன்று நெல்லைக்கு வருகை தந்தனர்.
தாமிரபரணி நதியின் கரைகள், குப்பைகள் கொட்டப்படும் இடங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அவர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தாமிரபரணியை சுத்தம் செய்வதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து நீதிபதிகள் கேட்ட கேள்விகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் விளக்கமளித்தனர்.
Related Tags :
Next Story