தேனி சோத்துப்பாறை அணை பகுதியில் மண்சரிவு - தண்ணீர் நிறம் மாறியதால் மக்கள் அதிர்ச்சி
தேனி சோத்துப்பாறை அணை பகுதியில் மண்சரிவு ஏற்பட்டதால் தண்ணீர் நிறம் செந்நிறமாக மாறியுள்ளது.
தேனி,
தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சியை சுற்றியுள்ள சுமார் 25 கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக சோத்துப்பாறை அணை விளங்கி வருகிறது. இந்நிலையில், நேற்று பெய்த கனமழையின் காரணமாக சோத்துப்பாறை அணை அருகே உள்ள அகமலை, கண்ணக்கரை பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டது.
இதனால் அணையின் தண்ணீர் சிவப்பு நிறமாக மாறியது. குடிநீருக்காக பயன்படுத்தப்படும் தண்ணீரின் நிறம் மாறியதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பெரியகுளம் நகராட்சியில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்ட பிறகும், அதன் நிறம் செந்நிறமாகவே உள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இதனை அதிகாரிகள் கவனித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story