தென்காசி மலர் சந்தையில் மல்லிகைப்பூ விலை கிடுகிடு உயர்வு - கிலோ ரூ.4,500-க்கு விற்பனை


தென்காசி மலர் சந்தையில் மல்லிகைப்பூ விலை கிடுகிடு உயர்வு - கிலோ ரூ.4,500-க்கு விற்பனை
x

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மலர் சந்தையில் ஒரு கிலோ மல்லிகைப்பூ விலை ரூ.4,500-க்கு விற்பனையாகிறது.

தென்காசி,

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போதிய மழை பெய்யாததாலும், பனிப்பொழிவு அதிகமாக இருப்பதாலும், பூக்கள் விளைச்சல் குறைந்துள்ளது. இதன் விளைவாக சங்கரன்கோவில் மலர் சந்தையில் பூக்களின் வரத்து குறைவாக உள்ளது.

இந்நிலையில், இன்று சங்கரன்கோவில் மலர் சந்தையில் ஒரு கிலோ மல்லிகைப்பூ 4 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கேரள வியாபாரிகள் அதிக அளவில் வந்து பூக்களை ஏலம் எடுத்துச் செல்வதும் மல்லிகைப்பூ விலை உயர்வுக்கு காரணம் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story