அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு-1,100 காளைகள், 900 வீரர்களுக்கு அனுமதி
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 1,100 காளைகளுக்கும் 900 மாடுபிடி வீரர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
அவனியாபுரம்,
அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு நடை பெறுகிறது. இதில் பங்கேற்க 1,100 காளை களுக்கும், 900 வீரர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வெற்றி பெறும் சிறந்த காளைக்கு டிராக்டரும், வீரருக்கு காரும் பரிசாக வழங்கப்பட உள்ளது.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.
பொங்கல் பண்டிகை தினமான இன்று அவனியாபுரத்திலும், நாளை பாலமேட்டிலும், நாளை மறுநாள் அலங்காநல்லூரிலும் அடுத்தடுத்து போட்டிகள் நடக்கின்றன.அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 1,100 காளைகளுக்கும் 900 மாடுபிடி வீரர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இன்று ஜல்லிக்கட்டு நடைபெறும் அவனியாபுரத்தில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
Related Tags :
Next Story