திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்ததை ஏற்க முடியாது - செல்வப்பெருந்தகை


திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்ததை ஏற்க முடியாது - செல்வப்பெருந்தகை
x

அரசு அங்கீகரித்த திருவள்ளுவர் படத்தை மாற்றி, சாதி, மதம் சார்ந்து வெளியிடுவது சட்டத்துக்கு புறம்பானது என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு சார்பில் திருவள்ளுவர் தினம், ஆண்டுதோறும் ஜனவரி மாதம் பொங்கலுக்கு மறுநாள் கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு இன்று (15.01.2025) திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டது.

கவர்னர் மாளிகையில் நடந்த திருவள்ளுவர் தின விழாவில் காவி உடையில் திருவள்ளுவர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்திருக்கிறார்.

அய்யன் திருவள்ளுவருக்கு சாதி, மொழி, மதம் என்பது கிடையாது. அவருக்கு காவி உடை அணிந்து, சித்தரிப்பது ஏற்க முடியாது. கவர்னர் ரவி, அரசு அங்கீகரித்த திருவள்ளுவர் படத்தை மாற்றி, சாதி, மத, சமயம் சார்ந்து வெளியிடுவது சட்டத்துக்கு புறம்பானது. சட்டத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் இருக்கும் கவர்னரே இப்படி செய்வது கண்டனத்துக்குரியது. வருத்தத்துக்குரியது.

தமிழ்நாடு அரசை மட்டுமல்ல, தமிழனத்தையும், திருவள்ளுவரையும் தொடர்ந்து அவமானப்படுத்தும் கவர்னரை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Next Story