அய்யன் வள்ளுவரை வணங்கிப் பணிகிறேன்: கமல்ஹாசன்


அய்யன் வள்ளுவரை வணங்கிப் பணிகிறேன்: கமல்ஹாசன்
x

அய்யன் வள்ளுவரை வணங்கிப் பணிகிறேன் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளின் ஒரு நிகழ்வாக தை மாதத்தின் 2-வது நாளான மாட்டுப் பொங்கல் திருநாளன்று, திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி, திருவள்ளுவர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-

"மதங்களைச் சாரா மனிதம் பாடியவர்; வேள்வியிற்சிறந்தது அன்பென்றோதியவர்; யாப்பின் அருங்கல மாலுமியானவர்; மூப்பின் தடமில்லா இளமைச் சொல்லால் உலகுக்கே வழிகாட்டும் அய்யன் வள்ளுவரை வணங்கிப் பணிகிறேன்." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story