சென்னையில் ஹோலி பண்டிகை கோலாகலம்


சென்னையில் ஹோலி பண்டிகை கோலாகலம்
x

சென்னையில் வசித்து வரும் வடமாநிலத்தவர் ஒருவர் மீது ஒருவர் வண்ணப்பொடிகளை தூவி ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர்.

சென்னை,

வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகை நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் வடமாநிலத்தவர்கள் அதிகமாக வசித்துவரும் பகுதிகளில் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது.சென்னையில் சவுகார்பேட்டை, பட்டாளம், வேப்பேரி உள்ளிட்ட பல பகுதிகளில் வசித்துவரும் வட மாநில பெண்கள், இளைஞர்கள், சிறுவர், சிறுமியர் பல வண்ணப் பொடிகளை ஒருவர் மீது ஒருவர் எறிந்தும், வண்ணப் பொடிகளைப் பூசியும் கோலாகலமாக ஹோலி பண்டிகையைக் கொண்டாடினர்.


Next Story