சென்னையில் கனமழை


சென்னையில் கனமழை
x

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகி உள்ளது.

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. இதன் காரணமாக, கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகி உள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. இந்த தாழ்வு பகுதி, அதற்கடுத்த, 2 தினங்களில் மேற்கு திசையில், தமிழகம்-இலங்கை கடலோரப் பகுதிகளை நோக்கி மெதுவாக நகரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இந்நிலையில்,சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை 4 மணியளவில் கனமழை பெய்தது. சென்ட்ரல், எழும்பூர், கோயம்பேடு, கிண்டி, ஆலந்தூர்,வடபழனி, வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், மாம்பலம், சைதாப்பேட்டை, குரோம்பேட்டை, பல்லாவரம், தாம்பரம், கூடுவாஞ்சேரி, பூந்தமல்லி,மாங்காடு, குன்றத்தூர் மேடவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.


Next Story