பட்டாசு விபத்தில் உயிரிழப்போர் குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்கும்: முதல் அமைச்சர் அறிவிப்பு


பட்டாசு விபத்தில் உயிரிழப்போர் குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்கும்: முதல் அமைச்சர் அறிவிப்பு
x
தினத்தந்தி 10 Nov 2024 1:04 PM IST (Updated: 10 Nov 2024 3:55 PM IST)
t-max-icont-min-icon

பட்டாசுத் தொழிலாளர்கள் உயிரிழந்தால் குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்கும் என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

விருதுநகர்,

விருதுநகர் பட்டம்புதூர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் பேசியதாவது:"விருதுநகரில் 95%க்கும் மேல் 12ஆம் வகுப்பு மாணவர்கள் உயர்கல்வியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதிகளவில் உயர்கல்வி சேர்க்கை நடைபெறுவது முக்கிய சாதனை. பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு உயர்கல்வி வரையிலான அனைத்து கல்விச் செலவுகளையும் அரசே ஏற்றுக்கொள்ளும்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியரின் கீழ் இதற்கு தனி நிதியம் உருவாக்கப்படும். கல்விச் செலவை அரசே ஏற்று நடத்த முதற்கட்டமாக இத்திட்டத்துக்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்படும். வீடற்ற ஏழைகளுக்கு இலவச வீட்டு மனைகள் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story