ஓ.ராஜா விடுதலையை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்-கே.பாலகிருஷ்ணன் பேட்டி


ஓ.ராஜா விடுதலையை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்-கே.பாலகிருஷ்ணன் பேட்டி
x
தினத்தந்தி 17 Nov 2024 8:07 AM IST (Updated: 17 Nov 2024 12:50 PM IST)
t-max-icont-min-icon

பூசாரி தற்கொலை வழக்கில் ஓ.ராஜா விடுதலையை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மதுரை,

திருமங்கலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மதுரை புறநகர் 24-வது மாவட்ட மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் அக்கட்சியின், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசினார். மதுரை எம்.பி. வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் நிருபர்களிடம் பாலகிருஷ்ணன் கூறியதாவது:-

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா உள்பட 6 பேர், பூசாரி தற்கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டு இருப்பது மிகுந்த குழப்பங்களை ஏற்படுத்தி உள்ளது. அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும். நீதி கிடைக்க உரிய விசாரணை நடத்த வேண்டும்.

இ்வ்வாறு அவர் கூறினார்.


Next Story