விளையாட்டு வீரர்களுக்கு அரசுத்துறையில் வேலைவாய்ப்பு : நடவடிக்கைகளை துரிதப்படுத்த உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்


விளையாட்டு வீரர்களுக்கு அரசுத்துறையில்  வேலைவாய்ப்பு : நடவடிக்கைகளை துரிதப்படுத்த உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 20 Nov 2024 7:07 PM IST (Updated: 20 Nov 2024 7:26 PM IST)
t-max-icont-min-icon

உயர் நிலை ஆய்வுக் கூட்டம் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது.

சென்னை,

சர்வதேச ,தேசிய , மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுகின்ற வீரர் - வீராங்கனைகள் 100 பேருக்கு முதற்கட்டமாக , அரசுத்துறை மற்றும் அரசு பொதுத்துறை நிறுவனங்களில் 3 சதவீதம் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் வேலைவாய்ப்புகளை வழங்கிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் , இதற்கான பணி நியமன ஆணைகளை விரைந்து தயார் செய்வது தொடர்பான உயர் நிலை ஆய்வுக் கூட்டம் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் , ஒவ்வொரு துறையிலும் , பொதுத்துறை நிறுவனங்களிலும் கண்டறியப்பட்டுள்ள காலிப்பணியிடங்களின் அடிப்படையில், விளையாட்டு வீரர்களுக்கு 3 % இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் வேலைவாய்ப்பை வழங்கிடுவதற்கு தேவையான நடவடிக்கைகளை துரிதப்படுத்த அரசு உயர் அதிகாரிகளிடம் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தினார்.


Next Story