விஜய்யை தொடர்ந்து கவர்னர் ஆர்.என்.ரவியுடன் அண்ணாமலை சந்திப்பு
கவர்னர் ஆர்.என்.ரவியை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினார்.
சென்னை,
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை சம்பவத்துக்கு த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்த நிலையில், இது தொடர்பாக இன்று கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசினார். அப்போது தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும் என்றும், அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், தெரிவித்து கவர்னரிடம் விஜய் மனு கொடுத்தார்.
இந்த நிலையில், விஜய்யை தொடர்ந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் இன்று கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னரை சந்தித்தார். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக்கோரி கவர்னரை அண்ணாமலை சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
Related Tags :
Next Story