ஈரோடு கிழக்கு தொகுதி: பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க முடியாத சூழல் - மக்கள் ஏமாற்றம்


ஈரோடு கிழக்கு தொகுதி: பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க முடியாத சூழல் - மக்கள் ஏமாற்றம்
x
தினத்தந்தி 9 Jan 2025 1:48 PM IST (Updated: 9 Jan 2025 2:05 PM IST)
t-max-icont-min-icon

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது.

ஈரோடு,

ஈரோடு சட்டசபை உறுப்பினராக இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவை அடுத்து, அந்த தொகுதிக்கு பிப் 5-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, ஜனவரி 7-ம் தேதி முதல் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.

இந்தநிலையில், தமிழகம் முழுவதும் கரும்பு, அரிசி உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலை தொடங்கிவைத்தார்.

இதனிடையே, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் பொங்கல் தொகுப்புக்கான டோக்கன்களை ஏற்கெனவே பெற்றிருந்த மக்கள் நியாய விலைக் கடைகளுக்கு இன்று காலை வந்திருந்தனர். அப்போது அங்கு ஒட்டப்பட்டிருந்த நோட்டீசை பார்த்து மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். அதில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது.

அனுமதி கிடைத்தவுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று நோட்டீசில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நோட்டீசானது ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட 100க்கும் மேற்பட்ட நியாயவிலைக் கடைகளில் ஒட்டப்பட்டு இருந்தது. ஈரோடு கிழக்கு தொகுதியில் மட்டும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story