காட்டு யானை மிதித்து முதியவர் சாவு


காட்டு யானை மிதித்து முதியவர் சாவு
x

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 65 வயது முதியவர் காட்டு யானையால் மிதித்து கொல்லப்பட்டதாக வன அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஈரோடு,

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள கட்டட்டி பழங்குடி கிராமத்தைச் சேர்ந்த மாதேவப்பா(65) தனது மூன்று நண்பர்களுடன் நேற்று(14.01.2025) காட்டிற்குள் விறகு சேகரிக்கச் சென்றுள்ளார். இதில் மாதேவப்பா பசுவேஸ்வரர் கோயில் பகுதிக்குச் சென்று மதியம் வரை திரும்பி வரவில்லை.

இதனால் சந்தேகமடைந்த மூவரும் அவரைத் தேடியபோது, பசுவேஸ்வரர் கோயில் சாலையில் யானை மிதித்ததில் பலத்த காயங்களுடன் மாதேவப்பா இருப்பதைக் பார்த்தவர்கள் உடனடியாக கடம்பூர் போலீசார் மற்றும் கீர்மலம் வனத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் அளித்தனர்.

இந்நிலையில் காவல்துறை மற்றும் வனத்துறையினர் குழு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாதேவப்பாவின் உடலை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். யானை மிதித்து மரணம் அடைந்ததாக காவல்துறை மற்றும் வனத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story