வரத்து குறைவால் வெங்காயத்தை தொடர்ந்து பூண்டு விலையும் கிடுகிடுவென உயர்வு


வரத்து குறைவால் வெங்காயத்தை தொடர்ந்து பூண்டு விலையும் கிடுகிடுவென உயர்வு
x

வரத்து குறைவால் கோயம்பேடு சந்தையில் பூண்டு விலை அதிகரித்துள்ளது.

சென்னை,

அன்றாட சமையலில் பயன் படுத்தப்படும் விளை பொருட்களில் ஒன்று பூண்டு. குறிப்பாக, அசைவ உணவு தயாரிப்பில் பூண்டு அதிகளவில் பயன் படுத்தப்படுகிறது. தமிழகத்தில் நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் பூண்டு பயிரிடப்பட்டாலும், மாநிலத்தின் பெரும்பான்மையான தேவையை ஈடு செய்வதற்கு, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் இருந்து பூண்டு இறக்குமதி செய்யப்படுகிறது.

இந்நிலையில், பிற மாநிலங்களில் இருந்து வரும் பூண்டின் வரத்து குறைவால் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ பூண்டு மொத்த விற்பனையில் அதிகபட்சமாக ரூ.400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை விற்பனையில் ஒரு கிலோ பூண்டு ரூ.300 முதல் ரூ.400 வரையிலும் விற்கப்படுகிறது.

இதுகுறித்து பூண்டு மொத்த வியாபாரி ஒருவர் கூறும்போது, கோயம்பேடு சந்தைக்கு மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் இருந்து தான் அதிக அளவில் பூண்டு விற்பனைக்கு வரும். இந்த மாநிலங்களில் தற்போது பூண்டு சீசன் முடியும் தருவாயில் உள்ளது. இதனால் வரத்து குறைந்து விலை அதிகரித்து வருகிறது. இனி வரும் நாட்களில் பூண்டின் விலை மேலும் அதிகரிக்கவே வாய்ப்புள்ளது. ஜனவரி மாத இறுதியில் மீண்டும் வரத்து அதிகரித்து பூண்டு விலை படிப்படியாக குறையும் என்றார்.


Next Story