2026ல் மீண்டும் திமுக ஆட்சி; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி


2026ல் மீண்டும் திமுக ஆட்சி; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி
x

வீரத்தின் விளைநிலமாம் தூத்துக்குடி மண்ணில் 2026-இல் மீண்டும் திமுக ஆட்சி அமைத்திட உறுதியேற்றோம் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தூத்துக்குடி,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று முடிவுற்ற பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் வருகிறார்.

அந்த வகையில் புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கம் தொடக்கம், மினி டைடல் பூங்கா திறப்பு, ஆலோசனை கூட்டம் ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று மதியம் தூத்துக்குடி தூத்துக்குடிக்கு வருகை தந்தார். தொடர்ந்து தூத்துக்குடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காவை திறந்து வைத்தார். இதனையடுத்து தூத்துக்குடி மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் கட்சி பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

இந்நிலையில், 2026ல் மீண்டும் திமுக ஆட்சி அமைத்திட உறுதியேற்றோம் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் தள பதிவில்,

வீரத்தின் விளைநிலமாம் தூத்துக்குடி மண்ணில், களப்பணியாற்றும் கழக வீரர்கள் #களம்2026-இல் மீண்டும் கழக ஆட்சி அமைத்திட உறுதியேற்றோம்! தங்களுக்குட்பட்ட வாக்குச் சாவடிகளில் கழகத்துக்குப் பெரும்பான்மையான வாக்குகள் கிடைக்கப் பாடுபட்டு வரலாறு படைப்போம் எனக் கழக நிர்வாகிகள் உறுதியளித்தனர் என பதிவிட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட திமுக நிர்வாகிகளுடனான சந்திப்புக்குப் பிறகு, மண்டபத்திலிருந்து வெளியில் வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்திக்க சாலை நெடுக கட்சியினர் காத்திருந்தனர். அப்போது அங்கிருந்த சிறுமிகளுக்கு அவர் சாக்லெட் வழங்கி வாழ்த்தினார்.


Next Story