திமுக எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது


திமுக எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது
x
தினத்தந்தி 29 Jan 2025 2:40 AM (Updated: 29 Jan 2025 6:10 AM)
t-max-icont-min-icon

மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

சென்னை,

திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் (மக்களவை-மாநிலங்களவை) கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலி மாறன் வளாக அரங்கில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள், திமுக எம்.பி.க்கள் கலந்து கொண்டுள்ளனர்.

வருகிற 1-ந்தேதி மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இந்த கூட்டத்தொடரில் திமுக எம்.பி.க்கள் எவ்வாறு செயல்பட வேண்டும்? மத்திய அரசுக்கு எப்படி அழுத்தம் தர வேண்டும்? என்பது குறித்து இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனைகள் மற்றும் அறிவுறுத்தல்களை வழங்க உள்ளார்.


Next Story