வெம்பக்கோட்டை அகழாய்வில் சங்கு வளையல் கண்டெடுப்பு
வெம்பக்கோட்டை அகழாய்வில் சங்கு வளையல் கண்டெடுக்கப்பட்டது.
சென்னை,
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் 3-ம் கட்ட அகழாய்வு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அகழாய்வில் இதுவரை 16 குழிகள் தோண்டப்பட்டுள்ளன.
இந்தநிலையில் நேற்று கூடுதலாக தோண்டப்பட்ட குழியில் பியான்ஸ் எனப்படும் மூலப்பொருளால் தயாரிக்கப்பட்ட உருண்டை வடிவ மணி, மாவு கற்களால் செய்யப்பட்ட நீள்வட்ட வடிவ மணிகள், அலங்கரிக்கப்பட்ட சங்கு வளையல், கண்டெடுக்கப்பட்டன. இதுவரை 2,850க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளன
இதுகுறித்து அகழாய்வு இயக்குனர் பொன் பாஸ்கர் கூறுகையில், இந்த மணிகள் மற்றும் சங்கு வளையல்களை பெண்கள் அணிகலன்களாக பயன்படுத்தியுள்ளனர். முதல் இரண்டு கட்டங்களைவிட 3-ம் கட்ட அகழாய்வில் தொடர்ந்து கல்மணிகள் அதிகளவு கிடைத்து வருகின்றன என்றார்.
Related Tags :
Next Story