திண்டுக்கல்; கல்லூரி வளாகத்தில் முறிந்து விழுந்த மரம் - 7 பேர் காயம்


திண்டுக்கல்; கல்லூரி வளாகத்தில் முறிந்து விழுந்த மரம் - 7 பேர் காயம்
x

கல்லூரி வளாகத்தில் மரம் முறிந்து விழுந்ததில் 7 பேர் காயமடைந்தனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சொந்தமான செவிலியர் பயிற்சி கல்லூரி மற்றும் மாணவர் விடுதி திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள பழைய நீதிமன்ற வளாக கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று வார விடுமுறை என்பதால், மாணவ, மாணவிகளை சந்திப்பதற்காக அவர்களது உறவினர்கள் வந்திருந்தனர். அப்போது அங்கிருந்த மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்தது. இந்த சம்பவத்தின்போது அங்கு நின்றுகொண்டிருந்த ஒரு மாணவி உள்பட 7 பேர் காயமடைந்தனர்.

அவர்களை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்த தீயணைப்புத்துறையினர், முறிந்து விழுந்த மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story