ராணிப்பேட்டையில் ரூ. 19.21 கோடி மதிப்பிலான புதிய திட்ட பணிகள்: துணை முதல்-அமைச்சர் அடிக்கல் நாட்டினார்


ராணிப்பேட்டையில் ரூ. 19.21 கோடி மதிப்பிலான புதிய திட்ட பணிகள்: துணை முதல்-அமைச்சர் அடிக்கல் நாட்டினார்
x
தினத்தந்தி 6 Dec 2024 3:45 PM IST (Updated: 6 Dec 2024 5:18 PM IST)
t-max-icont-min-icon

ராணிப்பேட்டையில் கலைஞர் நூற்றாண்டு பொன் விழாவினை சிறப்பிக்கும் வகையில் நடைபெற்ற விழாவில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.

ராணிப்பேட்டை,

தமிழ்நாடு துணை முதல் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று ராணிப்பேட்டை மாவட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு பொன் விழாவினை சிறப்பிக்கும் வகையில் நடைபெற்ற விழாவில் பொதுப்பணித் துறைசார்பில் ரூபாய் 19.21 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 13 அரசு பள்ளிக் கட்டிடங்கள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார்.

பொதுப்பணித் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் 9.15 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 28 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 288 ஊராட்சிகளுக்கு, தலா 33 விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய 364 கலைஞர் விளையாட்டு உபகரண தொகுப்புகளை வழங்கினார். பல்வேறு அரசு துறைகளின் சார்பில் 7,165 பயனாளிகளுக்கு 37.79 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மேலும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் 700 பயனாளிகளுக்கு 8.12 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான இலவச வீட்டுமனை பட்டாக்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூபாய் 18.36 லட்சம் மதிப்பீட்டில் கலைஞரின் கனவு இல்லம், பழங்குடியினர் இல்லம் கட்டுவதற்கான ஆணைகளையும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சார்ந்த 2,229 மகளிருக்கு, ரூபாய் 17.98 கோடிக்கான வங்கி கடனுதவி காசோலைகளையும், உணவுப் பொருள் மற்றும் வழங்கல் துறை சார்பில் 178 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகளையும் வழங்கினார்.

மேலும் கூட்டுறவுத் துறை சார்பில் 716 மகளிர்சுய உதவிக் குழுக்களுக்கு 7.43 கோடி ரூபாய்க்கான கடனுதவி காசோலைகளையும், வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பில் மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ்70 பயனாளிகளுக்கு1.09 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்டஉதவிகளையும், தோட்டக்கலை மற்றும் மலைபயிர்கள் துறை சார்பில் 6 பயனாளிகளுக்கு ரூபாய் 3.57 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் 1 பயனாளிக்கு 2.23 லட்சம் ரூபாய் மானியத்தில் பவர் டில்லரையும் வழங்கினார்.

மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 50 பயனாளிகளுக்கு மொத்தம் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான செயற்கைகால்கள், இருசக்கர வாகனம் மற்றும் வீல்சேர் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும், தமிழ்நாடு தொழில் வணிகத் துறை, மாவட்ட தொழில் மையம் அண்ணல் அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் 36 பயனாளிகளுக்கு தொழில் தொடங்க 77.76 லட்சம் ரூபாய் மானிய உதவிகளையும், தாட்கோ சார்பில் நன்னிலம் மகளிர் நில உடமைத்திட்டம் மற்றும் முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் சமூக பொருளாதார தொழில் முனைவு திட்டத்தின் கீழ் 22 பயனாளிகளுக்கு 48.08 லட்சம் ரூபாய்க்கான மானிய உதவிகளையும் வழங்கினார்.

தொடர்ந்து முன்னோடி வங்கி சார்பில் 8 பயனாளிகளுக்கு கறவைமாடுகள் வாங்க 8 லட்சம் ரூபாய்க்கான கடனுதவிகளையும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூபாய் 33 ஆயிரம் மதிப்பிலான தையல் இயந்திரங்களையும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை சார்பில் 33 பயனாளிகளுக்கு ரூபாய் 2.65 இலட்சத்திற்கான மானிய உதவிகளையும், நகராட்சி நிர்வாகத் துறையின் சார்பில் 227 தூய்மைகாவலர்களுக்கு ரூபாய் 6.81 லட்சம் மதிப்பிலான பாதுகாப்புஉபகரணங்களையும் என மொத்தம் 7,165 பயனாளிகளுக்கு, ரூபாய் 37.79 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு துணை முதல் -அமைச்சர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி, நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர்.எஸ். ஜெகத்ரட்சகன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெ.எல். ஈஸ்வரப்பன், ஏ.எம். முனிரத்தினம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர்.அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ஜெ.யு. சந்திரகலா, மாவட்ட வருவாய் அலுவலர் ந. சுரேஷ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பா.ஜெயசுதா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story