டெல்லி: மத்திய மந்திரி அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சூழலில், மந்திரி அமித்ஷா உடனான எடப்பாடி பழனிசாமியின் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
புதுடெல்லி,
டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை, அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று அவருடைய இல்லத்தில் நேரில் சந்தித்து உள்ளார். அப்போது அவருக்கு பூங்கொத்து கொடுத்து, சால்வையும் போர்த்தினார். இதனை தொடர்ந்து இருவரும் முக்கிய ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
அவருடன் சென்றிருந்த மூத்த நிர்வாகிகள், எம்.பி.க்களும் மந்திரி அமித்ஷாவை சந்தித்துள்ளனர். இதேபோன்று கட்சியின் முக்கிய தலைவர்களான எஸ்.பி. வேலுமணி, கே.பி. முனுசாமி உள்ளிட்டோரும் டெல்லி சென்றனர்.
அடுத்த ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தல் நடைபெற உள்ள சூழலில், மந்திரி அமித்ஷா உடனான இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
Related Tags :
Next Story