பெண் வக்கீல் பற்றி அவதூறு: ஸ்ரீரங்கம் ரங்கராஜன் மீது மேலும் ஒரு வழக்கு


பெண் வக்கீல் பற்றி அவதூறு: ஸ்ரீரங்கம் ரங்கராஜன் மீது மேலும் ஒரு வழக்கு
x

ரங்கராஜன் மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னை,

திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ஆன்மிக பேச்சாளர் ரங்கராஜன் நரசிம்மன் 'யூடியூப்' சேனலில் வெளியிட்ட வீடியோ பதிவில், ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் சுவாமிகள் குறித்து விமர்சித்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின்பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள 'சைபர் கிரைம்' போலீசார் வழக்குப்பதிவு செய்து ரங்கராஜனை கடந்த 15-ந் தேதி கைது செய்தனர்.

இந்த நிலையில் ஸ்ரீரங்கம் ரங்கராஜன் தன்னை பற்றி சமூக வலைத்தளத்தில் அவதூறு கருத்துகளை தெரிவித்துள்ளதாக சென்னை ஐகோர்ட்டு பெண் வக்கீல் ஒருவர் திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் ரங்கராஜன் மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Next Story