புயல் நாளை கரை கடக்கிறது.. பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம்


LIVE
தினத்தந்தி 29 Nov 2024 9:56 AM IST (Updated: 30 Nov 2024 12:50 AM IST)
t-max-icont-min-icon

புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.


Live Updates

  • 29 Nov 2024 11:02 AM IST

    வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 3 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும். நாளை மதியம் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் வலுப்பெறாது என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இயற்கையில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

  • 29 Nov 2024 10:47 AM IST

    ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாகவே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் மீண்டும் அறிவித்துள்ளது.

  • 29 Nov 2024 10:37 AM IST

    கடலில் வீசி வரும் பலத்த சூறைக்காற்றால் டிச.2 ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.

  • 29 Nov 2024 10:24 AM IST

    சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் (நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை) பதிவான மழையின் அளவு

    கத்திவாக்கம் - 6.2 செ.மீ

    பேசின் பிரிட்ஜ் - 4.8 செ.மீ

    தண்டையார்பேட்டை - 4.4 செ.மீ

    திருவொற்றியூர் - 4.4 செ.மீ

    சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

  • புயல் உருவாக வாய்ப்பு - பிரதீப் ஜான் கணிப்பு
    29 Nov 2024 10:21 AM IST

    புயல் உருவாக வாய்ப்பு - பிரதீப் ஜான் கணிப்பு

    ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது. காற்றின் வேகம் 64.8 கி.மீ (35 நாட்ஸ்) இருந்தால் அதனை புயல் எனக் கூறுவோம், தற்போதுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 83 கி.மீ (45 நாட்ஸ்) வரை வலுப்பெற வாய்ப்பு உள்ளது. மேகக் கூட்டங்கள் அடர்த்தியாக உள்ளதாக இன்று பிற்பகல் முதல் மீண்டும் மழையை எதிர்பார்க்கலாம். மரக்காணத்தில் இன்றும், நாளையும் அதி கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளார். 


  • 29 Nov 2024 10:15 AM IST

    சென்னையில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  • ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் கொந்தளிக்கும் கடல்
    29 Nov 2024 10:11 AM IST

    ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் கொந்தளிக்கும் கடல்

    ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. மணிக்கு 45-60கிமீ வேகத்தில் வீசும் காற்றுடன் 2மீ உயரம் வரை அபாயகரமாக அலைகள் மேலெழும்புகிறது.

  • 7 கி.மீ. வேகத்தில் நகரும் தாழ்வு மண்டலம்
    29 Nov 2024 10:07 AM IST

    7 கி.மீ. வேகத்தில் நகரும் தாழ்வு மண்டலம்

    வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நகர்கிறது. நாகையில் இருந்து 310 கி.மீ. தொலைவிலும் புதுச்சேரியில் இருந்து 360 கி.மீ. தொலைவிலும் சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 400 கி.மீ. தொலைவிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது.

  • 29 Nov 2024 9:58 AM IST

    வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து நாளை கரையை கடக்கிறது. இதனால் தமிழகத்துக்கு புயல் ஆபத்து நீங்கியது. இருப்பினும் சென்னை உள்பட வடமாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் (நவ. 29, 30) ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.


Next Story