முதல்- அமைச்சர் கோப்பை 2024: சென்னை அணி சாம்பியன்


முதல்- அமைச்சர் கோப்பை 2024: சென்னை அணி சாம்பியன்
x

முதல் - அமைச்சர் கோப்பை தொடரின் நிறைவு விழா இன்று நடைபெறுகிறது.

சென்னை,

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில விளையாட்டு போட்டி சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் நடைபெற்றது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுப் பிரிவினர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் என 5 வகையான பிரிவுகளில் போட்டி நடைபெற்றது. இதில் மொத்தம் 11,56,566 நபர்கள் 36 வகையான விளையாட்டு போட்டிகளில், 168 பிரிவுகளில் கலந்து கொண்டனர்.

மாவட்ட, மண்டல அளவில் வெற்றி பெற்ற 33,000 நபர்களுக்கான போட்டிகள் அக்டோபர் 4 முதல் இன்று (24-ம் தேதி) வரை சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. நிறைவு நாளான இன்று வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின்,துணை முதல் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த தொடரில் 105 தங்கம் உட்பட 254 பதக்கங்களை வென்ற சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்றது. 31 தங்கம் உட்பட 93 பதக்கங்களுடன் செங்கல்பட்டு 2-வது இடமும், கோயப்புத்தூர் 102 (23 தங்கம்) பதக்கங்களுடன் 3-வது இடமும் பிடித்தன.


Next Story