சென்னை: எழும்பூர் ரெயில் நிலையத்தில் திடீர் தீ விபத்து

எழும்பூர் ரெயில் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை
சென்னை எழும்பூர் ரெயில் நிலையம், இந்தியாவின் முக்கிய மற்றும் பெரிய ரெயில் நிலையங்களில் ஒன்றாகும், இது தெற்கு ரெயில்வேயின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில் எழும்பூர் ரெயில் நிலையத்தில் உள்ள அலுவர்கள் அறையில் இன்று மதியம் 3.15 மணியளவில் திடீரென தீ ஏற்பட்டது. இதனைக்கண்ட ரெயில்வே போலீசார் உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராடி தீயை அணைத்தனர். இதனையடுத்து முதற்கட்ட விசாரணையில் மின்சார கேபிலில் ஏற்பட்ட மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story