சென்னை: உடற்பயிற்சியாளர் வீட்டில் கொள்ளை - 50 சவரன் நகைகள் திருட்டு


சென்னை: உடற்பயிற்சியாளர் வீட்டில் கொள்ளை - 50 சவரன் நகைகள் திருட்டு
x

சென்னையில் உடற்பயிற்சியாளரின் வீட்டில் 50 சவரன் நகை மற்றும் பணம் திருடப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னையை அடுத்த நங்கநல்லூரை சேர்ந்த உடற்பயிற்சியாளர் ஜனார்த்தனன் என்பவர், சொந்தமாக உடற்பயிற்சிக் கூடம் நடத்தி வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்த நிலையில், அவரது வீட்டில் இருந்த பணம் மற்றும் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

வீட்டின் முன்பக்க கிரில் கேட் மற்றும் மரக்கதவுகளை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 50 சவரன் நகை மற்றும் இரண்டரை லட்சம் ரூபாய் பணத்தை திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து ஜனார்த்தனன் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.


Next Story