சென்னை - நெல்லை வந்தே பாரத் ரெயில்...விரைவில் 16 பெட்டிகளாக மாற்றம்


சென்னை - நெல்லை வந்தே பாரத் ரெயில்...விரைவில் 16 பெட்டிகளாக  மாற்றம்
x
தினத்தந்தி 13 Nov 2024 7:54 AM IST (Updated: 13 Nov 2024 7:57 AM IST)
t-max-icont-min-icon

சென்னை - நெல்லை வந்தே பாரத் ரெயிலை 16 பெட்டிகளைக் கொண்டு இயக்க தெற்கு ரெயில்வே திட்டமிட்டுள்ளது

சென்னை,

நாடு முழுவதும் தற்போது பல்வேறு முக்கிய வழித்தடங்களில் வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், சென்னை எழும்பூா்- நெல்லை 'வந்தே பாரத்' ரெயியிலுக்கு பயணிகளிடையே வரவேற்பு அதிகரித்துள்ளது . இந்த ரெயில் நெல்லையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு அதே நாள் மதியம் 1.50 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடைகிறது. மறு மார்க்கமாக, எழும்பூரில் இருந்து பிற்பகல் 2.50 மணிக்கு புறப்பட்டு அதே நாள் இரவு 10.40 மணிக்கு நெல்லையை அடைகிறது. இந்த ரெயிலில் 7 ஏசி சேர் கார் பெட்டிகளும், ஒரு எக்ஸிகியூட்டிவ் சேர்கார் பெட்டியும் என மொத்தம் 8 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன

இந்த நிலையில் , பயணிகள் கூட்டம் அதிகமாகி வருவதால் சென்னை - நெல்லை வந்தே பாரத் ரெயிலை 16 பெட்டிகளைக் கொண்டு இயக்க தெற்கு ரெயில்வே திட்டமிட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரெயில்வே போக்குவரத்து பிரிவு, ரெயில்வே கோட்டங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில்,

சென்னை எழும்பூா்-நெல்லை இடையே இயக்கப்படும் 'வந்தே பாரத்' விரைவு ரெயிலில் (எண் 20665/20666) அதிக அளவில் பயணிகள் பயணம் செய்வதால், 16 பெட்டிகளைக் கொண்டு இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கேற்ப நெல்லை பணிமனையில் பராமரிப்பு நடவடிக்கையை உறுதிசெய்து கொள்ள வேண்டும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story