வெண்கோடி அருகே பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படுமா? - அமைச்சர் துரைமுருகன் பதில்


வெண்கோடி அருகே பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படுமா? - அமைச்சர் துரைமுருகன் பதில்
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 17 March 2025 5:18 AM (Updated: 17 March 2025 5:29 AM)
t-max-icont-min-icon

வெண்கோடி அருகே பாலாற்றின் குறுக்கே ரூ.70 கோடியில் தடுப்பணை அமைக்க திட்டம் உள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை

தமிழக அரசின் 2025-26-ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை, சட்டசபையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தார். மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

இன்றைய வினாக்கள் விடைகள் நேரத்தில், வெண்கொடி அருகே பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட அரசு முன்வருமா என உத்திரமேரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், வெண்குடியில் தடுப்பணை கட்ட வேண்டியது அவசியம்தான் என்றும் ரூ.70 கோடியில் 1,600 மீட்டர் நீளத்தில் தடுப்பணை அமைக்க திட்டம் உள்ளதாக கூறினார்.

மேலும், தடுப்பணை கட்டினால் 12 கிராம ஆழ்துளை கிணறுகளின் நீர்மட்டம் உயரும் என கூறிய அவர் 2,400 ஏக்கர் விவசாய நிலம் பயனடையும் எனவும், எனவே நிதி நிலைக்கு ஏற்ப முன்னுரிமை அடிப்படையில் வெண்குடியில் தடுப்பணை கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.


Next Story