'பேரிடர் வந்தால் தமிழ்நாட்டை மத்திய அரசு புறக்கணித்து விடுகிறது' - செல்வப்பெருந்தகை விமர்சனம்


பேரிடர் வந்தால் தமிழ்நாட்டை மத்திய அரசு புறக்கணித்து விடுகிறது - செல்வப்பெருந்தகை விமர்சனம்
x
தினத்தந்தி 6 Dec 2024 9:17 AM (Updated: 6 Dec 2024 11:37 AM)
t-max-icont-min-icon

பேரிடர் வந்தால் தமிழ்நாட்டை மத்திய அரசு புறக்கணித்து விடுகிறது என செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.

சென்னை,

காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"தமிழ்நாட்டை மத்திய அரசு நிதிநிலை அறிக்கையில் புறக்கணிக்கிறது. பேரிடர் வந்தாலும் தமிழ்நாட்டை மத்திய அரசு புறக்கணித்து விடுகிறது. கடந்த ஆண்டு மாநில அரசு கேட்ட 29 ஆயிரம் கோடியை மத்திய அரசு கொடுக்கவில்லை. இப்போது குறைந்தபட்சம் 2 ஆயிரம் கோடி கொடுக்க வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் அதையும் மத்திய அரசு இதுவரை கொடுக்கவில்லை.

தமிழ்நாடு என்பது இந்தியாவில்தான் இருக்கிறதா என்று அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். தமிழ்நாடு இந்தியாவின் ஒரு அங்கம், இந்தியாவில்தான் இந்த மாநிலம் இருக்கிறது என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்."

இவ்வாறு செல்வப்பெருந்தகை கூறினார்.


Next Story