கிண்டி ரேஸ் கிளப் மைதானத்தில் நீர்நிலை அமைக்க தடை கோரிய வழக்கு தள்ளுபடி


கிண்டி ரேஸ் கிளப் மைதானத்தில் நீர்நிலை அமைக்க தடை கோரிய வழக்கு தள்ளுபடி
x
தினத்தந்தி 18 Feb 2025 2:17 PM (Updated: 18 Feb 2025 2:18 PM)
t-max-icont-min-icon

கிண்டி ரேஸ் கிளப்பில் மைதானத்தில் நீர்நிலைகள் அமைக்கும் பணிகளுக்கு தடை கோரிய மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

சென்னை,

சென்னை கிண்டி ரேஸ் கிளப்பில் உள்ள கோல்ப் மைதானத்தில் நீர்நிலைகள் அமைக்கும் பணிகளுக்கு தடை விதிக்கக் கோரி ஜிம்கானா கிளப் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, வழக்கு தொடர ஜிம்கானா கிளப்புக்கு எந்த உரிமையும் இல்லை என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி, குத்தகைக்கு விட்ட நிலத்தை அரசு எடுத்துக்கொள்ளும் முன்பு ஜிம்கானா கிளப்புக்கு நோட்டீஸ் அளிக்க வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்து, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


Next Story