சீமான் உட்பட 231 பேர் மீது வழக்குப்பதிவு


சீமான் உட்பட 231 பேர் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 1 Jan 2025 10:48 AM IST (Updated: 1 Jan 2025 4:14 PM IST)
t-max-icont-min-icon

சீமான் உட்பட 231 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னை,

அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து அரசியல் கட்சிகள், மாணவர் அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடக்கின்றன.

அதன் தொடர்ச்சியாக நாம் தமிழர் கட்சி சார்பில் இந்த பாலியல் பலாத்கார சம்பவத்தை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக போலீஸ் அனுமதி கேட்ட நிலையில், அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து தடையை மீறி நாம் தமிழர் கட்சியினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட வந்தனர்.

அப்போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் 40 பெண்கள் உள்பட 200 பேரை போலீசார் கைது செய்து பஸ், வேனில் ஏற்றிச் சென்றனர். இந்த கைது சம்பவத்தால், சென்னை வள்ளுவர் கோட்டம் நேற்று பரபரப்பாக காணப்பட்டது. இந்த நிலையில், தடையை மீறி போராட முயன்ற சீமான் உள்ளிட்ட 231 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


Next Story