காலை உணவுத் திட்டம்: பயனடையும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு


காலை உணவுத் திட்டம்: பயனடையும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
x

2024-25 பட்ஜெட்டில் காலை உணவுத் திட்டத்திற்கு ரூ.600.49 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

சென்னை,

தமிழகத்தில்'முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின்' கீழ் பயனடையும் பள்ளிகள் மற்றும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கப்பட்ட காலை உணவுத் திட்டத்தின் கீழ் பயனடையும் பள்ளிகளின் எண்ணிக்கை 34,987 ஆக அதிகரித்துள்ளது . பயனடையும் மாணவர்கள் எண்ணிக்கை 16,98,272 ஆக உயர்ந்துள்ளது.

2024-25 பட்ஜெட்டில் காலை உணவுத் திட்டத்திற்கு ரூ.600.49 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது . இத்திட்டத்திற்கு தனி செயலி உருவாக்கப்பட்டு செயல்பாடுகள் கண்காணிக்கப்படுகிறது . செயலி மூலம் உணவு தயாரிப்பு , விநியோகம், மையங்களில் காலை உணவு பெறப்பட்ட நேரம் உள்ளிட்ட தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன.


Next Story