பாஜக மற்றும் எதிர்கட்சியினர் மக்கள் பலத்துடன் இல்லை: அமைச்சர் தா.மோ.அன்பரசன்


பாஜக மற்றும் எதிர்கட்சியினர் மக்கள் பலத்துடன் இல்லை: அமைச்சர் தா.மோ.அன்பரசன்
x

பாஜக மற்றும் எதிர்கட்சியினர் மக்கள் பலத்துடன் இல்லை என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறினார்.

சென்னை,

தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி காஞ்சீபுரம் மண்டல ஆய்வு கூட்டம் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் மாங்காடு அடுத்த சிக்கராயபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணை பொதுச்செயலாளர் பொன்முடி, தி.மு.க. தொழில் நுட்ப அணி செயலாளர் டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினார்கள்.

கூட்டத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது:-

தி.மு.க. ஆட்சியில் கருணாநிதி கொண்டு வந்த 20 கிலோ இலவச அரிசி மூலம் பல குடும்பங்கள் உயிர் வாழ்கின்றன என்று பேசியதை அப்படியே வெளியிடாமல் வெட்டி ஒட்டி பொய் செய்தியை சமூக வலைத்தளங்கள் மூலம் அமைச்சரின் ஆணவபேச்சு என்று அவதூறு பரப்பினார்கள் தேர்தல் காலத்தில் யார் வந்தாலும் நாங்கள் பார்த்துகொள்கிறோம்.

பாஜக மற்றும் எதிர்கட்சியினர் மக்கள் பலத்துடன் இல்லை. சமூக வலைத்தளங்கள் பலத்துடன் தான் அரசியல் செய்கின்றனர். சமூக வலைத்தளங்களில் தி.மு.க.வுக்கு எதிராக அவதூறு பரப்புபவர்களை தகவல் தொழில்நுட்ப அணிகளாகிய நீங்கள் பார்த்து கொள்ளுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story