அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 12 பேருக்கு காயம்


அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 12 பேருக்கு காயம்
x
தினத்தந்தி 14 Jan 2025 11:15 AM IST (Updated: 14 Jan 2025 11:17 AM IST)
t-max-icont-min-icon

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் தற்போது வரை 4 சுற்றுகள் நிறைவடைந்துள்ளன.

மதுரை,

தைப்பொங்கல் திருநாளான இன்று மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்க 1,100 காளைகளுக்கும், 900 வீரர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வெற்றி பெறும் சிறந்த காளைக்கு டிராக்டரும், முதலிடம் பிடிக்கு மாடுபிடி வீரருக்கு காரும் பரிசாக வழங்கப்பட உள்ளது.

முதலில் கோவில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. அதனை தொடர்ந்து வாடிவாசலில் சீறி வரும் காளைகளை போட்டி போட்டு கொண்டு வீரர்கள் மடக்கி பிடித்து வருகின்றன. ஒவ்வொரு சுற்றுகளாக காளைகள் அவித்துவிடப்படுகின்றன. ஒவ்வொரு சுற்றுக்கும் கலர் கலர் வண்ண டி-சர்ட்களை அணிந்து களத்தில் இறங்கி வருகின்றனர். ஒவ்வொரு காளை அவிழ்த்து விடும்போதும் 2 சக்கர வாகனம், தங்க காசு, வெள்ளி காசு, ரொக்க பணம், குக்கர், வேட்டி, அண்டா போன்ற பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசு பொருட்கள் அளிக்கப்படுகின்றன.

தற்போது வரை 4 சுற்றுகள் நிறைவடைந்துள்ளன. இதில் 8 காளைகளை அடக்கி கார்த்தி என்பவர் முதலிடத்தை பிடித்துள்ளார். இவர் 2022 மற்றும் 2024ல் நடந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகளில் முதலிடம் பிடித்து அசத்தியது குறிப்பிடத்தக்கது. திவாகர் என்பவர் 7 காளைகளை அடக்கி 2-ம் இடத்திலும், ராகவா என்பவர் 3 காளைகளை அடக்கி 3-ம் இடத்திலும் உள்ளனர்.

இந்த நிலையில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் இதுவரை 12 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. மாடுபிடி வீரர்கள் 6 பேர்; மாடு உரிமையாளர் 5 பேர்; பார்வையாளர் ஒருவருக்கு காயம் அடைந்துள்ளனர். போலி ஆவணம், காயங்களுடன் கொண்டுவரப்பட்ட காளைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன.


Next Story