கோவையில் பயங்கரவாத தடுப்புப் பிரிவு எஸ்எஸ்ஐ தற்கொலை


கோவையில் பயங்கரவாத தடுப்புப் பிரிவு எஸ்எஸ்ஐ தற்கொலை
x
தினத்தந்தி 13 March 2025 3:14 AM (Updated: 13 March 2025 6:38 AM)
t-max-icont-min-icon

சொக்கலிங்கம் பயங்கரவாத தடுப்பு பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளராக கடந்த 2024ம் ஆண்டில் இருந்து பணிபுரிந்து வந்தார்.

கோவை,

கோவையில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணி புரிந்து வந்த சொக்கலிங்கம் (54 வயது) என்பவர், கோவை வ.உ.சி. மைதானத்தில் உள்ள புங்கை மரத்தில் நேற்றிரவு சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நேற்றிரவு ரோந்து பணியிலிருந்த காவலர்கள் பார்த்துள்ளனர். தொடர்ந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.சொக்கலிங்கம் பயங்கரவாத தடுப்பு பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளராக கடந்த 2024 ஆம் ஆண்டில் இருந்து பணிபுரிந்து வருகிறார். 1997 ஆண்டு காவல்துறையில் சேர்ந்துள்ளார்.பந்தய சாலை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story