சமூக விரோதிகளுக்கு காவல்துறை மீது எந்த பயமும் இல்லை - பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்


சமூக விரோதிகளுக்கு  காவல்துறை மீது  எந்த பயமும் இல்லை - பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்
x
தினத்தந்தி 25 Dec 2024 5:03 PM IST (Updated: 25 Dec 2024 5:57 PM IST)
t-max-icont-min-icon

மாணவிக்கு ஏற்பட்ட அநீதி பெரும். கண்டனத்திற்குரியது என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார் .

சென்னை,

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 21ம் தேதி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார் .அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக , தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மாநிலத் தலைநகரத்தின் மையப்பகுதியில், பொறியியல் கல்வி தலைமை நிறுவனமான அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத நிலை இருக்கிறது என்றால், சமூக விரோதிகளுக்கு, அரசின் மீதோ,காவல்துறையின் மீதோ எந்த பயமும் இல்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. உடனடியாக, இந்தக் குற்றத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு உரிய நீதியை தமிழக அரசும், காவல் துறையும் உடனடியாக செய்ய வேண்டும். வேலியே பயிரை மேய்ந்தது" என்ற பழமொழிக்கு ஏற்ப அந்த மாணவிக்கு ஏற்பட்ட அநீதி பெரும். கண்டனத்திற்குரியது. என தெரிவித்துள்ளார் .


Next Story