இஸ்ரோ தலைவர் நாராயணனுக்கு அண்ணாமலை வாழ்த்து
இஸ்ரோ தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த நாராயணனுக்கு அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் (இஸ்ரோ) தலைவராக தற்போது சோம்நாத் உள்ளார். இவரது பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. இந்த நிலையில், இஸ்ரோவின் புதிய தலைவராக வி. நாராயணனை மத்திய அரசின் நியமனக்குழு நியமனம் செய்துள்ளது. வரும் 14-ம் தேதி இஸ்ரோ தலைவராக வி.நாராயணன் பொறுப்பேற்க உள்ளார். 2 ஆண்டுகள் வரையில் இப்பதவியில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் இஸ்ரோ தலைவர் நாராயணனுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், இஸ்ரோவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள வி.நாராயணனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். தமிழ்நாட்டை சேர்ந்த புகழ்பெற்ற விஞ்ஞானி வி.நாராயணன், இந்தியாவின் கிரையோஜெனிக் எந்திர வளர்ச்சியில் முக்கிய பங்காற்றினார்.
சந்திரனின் தென் துருவப் பகுதியில் ரோவரை தரையிறக்கிய உலகின் முதல் நாடு என்ற பெருமையைப் பெறவைத்த இஸ்ரோவின் தலைவரான சோம்நாத்துக்கும் வாழ்த்துகள்" என பதிவிட்டுள்ளார்.