கேல் ரத்னா விருது பெறும் குகேஷுக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து
கேல் ரத்னா விருது பெறும் குகேஷுக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்
சென்னை,
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
2024ஆம் ஆண்டில் விளையாட்டுத் துறையில் சிறந்த சாதனை படைத்ததற்காக ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெறுவதற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த உலக செஸ் சாம்பியன் டி.குகேஷ், ஒலிம்பிக் போட்டியில் இரு பதக்கங்களை வென்ற துப்பாக்கிச் சுடும் வீராங்கனை மனு பாக்கர், இந்திய ஆக்கி அணியின் கேப்டன் ஹர்மன் பிரீத் சிங், பாரா தடகள வீரர் பிரவீன்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டிருப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோல், அர்ஜுனா விருதுபெற தேர்வு செய்யப்பட்டிருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த துளசிமதி முருகேசன், நித்தியஸ்ரீ சுமதி, மனிஷா ராமதாஸ் உள்ளிட்ட 32 பேருக்கும், துரோணாச்சாரியார் விருதுக்கு தேர்வு பெற்றுள்ள இறகுப்பந்து பயிற்சியாளர் முரளிதரனுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். என தெரிவித்துள்ளார் .