அதிமுக வலுவிழந்து வருகிறது- திருமாவளவன்


அதிமுக வலுவிழந்து வருகிறது- திருமாவளவன்
x

பெரியாரை தனிப்பட்ட முறையில் கொசைப்படுத்துவது ஏற்புடையதல்ல என திருமாவளவன் பேசினார்.

சென்னை,

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது;

ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக போட்டி இடவில்லை என்பது அரசியல் ரீதியாக அதிமுக வலுவிழந்து உள்ளதை காட்டுகிறது. சென்னை ஈ.சி.ஆர் பகுதியில் இளம் பெண்கள் வந்த காரை, திமுகவின் கட்சிக் கொடி கட்டிய காரில் வந்த இளைஞர்கள் கும்பலாக துரத்திய சம்பவத்தில், காரில் கட்சிக் கொடி கட்டப்பட்டிருப்பதாலேயே அவர்கள் திமுகவினர் என்கிற முடிவுக்கு வந்துவிட முடியாது இருப்பினும் நடவடிக்கை தேவை.

கவன ஈர்ப்புக்காக, சீமான் ஏதோ பேசுகிறார். பெரியாரை தனிப்பட்ட முறையில் கொசைப்படுத்துவது ஏற்புடையதல்ல. பெரியாருடனான மோதல் போக்கை சீமான் கைவிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். வக்பு வாரிய திருத்த சட்ட மசோதா அரசமைப்புக்கு எதிரானது. அரசமைப்பு சட்டத்திற்கு எதிரான அரசு பாஜக அரசு. எதிர்ப்புகளை மீறி சட்ட மசோதாவை தாக்கல் செய்யும் பாஜக அரசின் இந்த செயல் வன்மையான கண்டனத்திற்குரியது."

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story