அதிமுக என்பது ஒரு குடும்பம் - தங்கமணி


அதிமுக என்பது ஒரு குடும்பம் - தங்கமணி
x

அதிமுக என்பது ஒரு குடும்பம் என்று முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறினார்.

திருச்சி,

திருச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

அதிமுகவில் நிலவும் உட்கட்சி பூசல் விவகாரம் பொதுச்செயலாளரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அதிமுக என்பது ஒரு குடும்பம். கட்டுக்கோப்பான இயக்கம். பொதுச்செயலாளர் அனைவரிடத்திலும் அரவணைத்து பேசி ஒரு குடும்பத்தில் நிலவும் பிரச்சினையை பேசி தீர்ப்பது போல அதிமுகவில் நிலவும் உட்கட்சி பூசலையும் பேசித் தீர்ப்போம்.

வருகின்ற 2026-ம் ஆண்டு தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி அமையும், எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சர் பதவி ஏற்பார். அதிமுக கட்சியின் அடுத்தக்கட்ட கள ஆய்வுகள் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story