வி.சி.க. தலைவர் திருமாவளவனுடன் ஆதவ் அர்ஜுனா சந்திப்பு


வி.சி.க. தலைவர் திருமாவளவனுடன் ஆதவ் அர்ஜுனா சந்திப்பு
x
தினத்தந்தி 31 Jan 2025 2:52 PM (Updated: 31 Jan 2025 2:58 PM)
t-max-icont-min-icon

வி.சி.க. தலைவர் திருமாவளவனை ஆதவ் அர்ஜுனா சந்தித்துள்ளார்.

சென்னை,

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளராக செயல்பட்டு வந்தவர் ஆதவ் அர்ஜுனா. கட்சி விரோத செயலில் ஈடுபட்டதாக கூறி ஆதவ் அர்ஜுனாவை 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்வதாக வி.சி.க. தலைவர் திருமாவளவன் கடந்த மாதம் அறிவித்தார். இதையடுத்து, வி.சி.க.வில் இருந்து விலகுவதாக ஆதவ் அர்ஜுனா அறிவித்தார்.

இந்நிலையில், ஆதவ் அர்ஜுனா இன்று பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகத்திற்கு வந்தார். அதேபோல, அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்பப்பிரிவு இணைச்செயலாளராக இருந்த நிர்மல் குமாரும் பனையூரில் உள்ள த.வெ.க. அலுவலகத்திற்கு வந்தார். த.வெ.க. அலுவலகத்திற்கு வந்த இருவரும் தங்களை அக்கட்சியில் இணைத்துக்கொண்டனர்.

த.வெ.க.வில் இணைந்த ஆதவ் அர்ஜுனாவிற்கு தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. த.வெ.க.வின் அரசியல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமியுடன் இணைந்து ஆதவ் அர்ஜுனா செயல்படுவார் என த.வெ.க. தலைவர் விஜய் அறிவித்துள்ளார். அதேபோல், த.வெ.க.வின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பிரிவு துணை பொதுச்செயலாளராக நிர்மல் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், வி.சி.க. தலைவர் திருமாவளவனை தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜுனா நேரில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது திருமாவளவனிடம் 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற புத்தகத்தை திருமாவளவனிடம் ஆதவ் அர்ஜுனா வழங்கினார். முன்னதாக இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் திருமாவளவன் மற்றும் விஜய் ஆகியோர் கலந்து கொள்வதாக இருந்த நிலையில், பின்னர் அந்த நிகழ்ச்சியில் ஆதவ் அர்ஜுனா கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story