ஆதவ் அர்ஜுனா சந்திப்பு: இதில் அரசியல் கிடையாது - திருமாவளவன் பேட்டி


ஆதவ் அர்ஜுனா சந்திப்பு: இதில் அரசியல் கிடையாது - திருமாவளவன் பேட்டி
x
தினத்தந்தி 31 Jan 2025 6:39 PM (Updated: 31 Jan 2025 8:07 PM)
t-max-icont-min-icon

பெரியாரின் தேவை இன்றியமையாத ஒன்றாக உள்ளதாக ஆதவ் என்னிடம் பகிர்ந்தார் என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறினார்.

சென்னை,

விசிக முன்னாள் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முன்னிலையில் வெள்ளிக்கிழமை (ஜன.31) அக்கட்சியில் இணைந்தார். அவருக்கு தவெகவின் தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. மேலும் தவெகவில் இணைந்த சில மணி நேரங்களில் சென்னையில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகம் வந்த ஆதவ் அர்ஜுனா அங்கு திருமாவளவனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

ஆதர் அர்ஜுனாவுடனான சந்திப்புக்கு பின் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

ஆதவ் அர்ஜுனா விசகவை விட்டு வெளியேறும் சூழல் ஏற்பட்டபோது அதை ஒரு பகையாக கருதவில்லை. கருத்தியல் ரீதியாக முரண்கள் இருந்தாலும், களத்தில் எதிரெதிர் துருவங்களில் நின்று செயல்பட்டாலும் இத்தகைய நட்புறவை பேணுவது அரசியலில் ஒரு நாகரீகமான அணுகுமுறை. எங்கள் சந்திப்பில் எந்த அரசியல் கணக்கும் இல்லை. வேறு கட்சியில் இணைந்தாலும் மரியாதை நிமித்தமாக ஆதவ் அர்ஜுனா என்னை சந்தித்தார். இதில் அரசியல் கிடையாது. பெரியாரின் தேவை இன்றியமையாத ஒன்றாக உள்ளதாக ஆதவ் என்னிடம் பகிர்ந்தார். ஆதவ் அர்ஜுனாவுக்கு எனது வாழ்த்துகள் என்றார்.


Next Story