பாடப்புத்தகத்தில் நல்லகண்ணு இடம்பெற வேண்டும் - நடிகர் விஜய் சேதுபதி கோரிக்கை


பாடப்புத்தகத்தில் நல்லகண்ணு இடம்பெற வேண்டும் - நடிகர் விஜய் சேதுபதி கோரிக்கை
x
தினத்தந்தி 29 Dec 2024 8:56 PM IST (Updated: 29 Dec 2024 9:15 PM IST)
t-max-icont-min-icon

விடுதலை போராட்ட வீரர் நல்லகண்ணுவின் வாழ்க்கை வரலாறு, பாடப்புத்தகத்தில் இடம்பெற வேண்டும் என்று நடிகர் விஜய் சேதுபதி கூறியுள்ளார்.

சென்னை,

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லக்கண்ணுவின் நூற்றாண்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் இன்று கொண்டாடப்பட்டது. பழ நெடுமாறன் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். இந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின், திமுக மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். நல்லகண்ணு குறித்த 'நூறு கவிஞர்கள் - நூறு கவிதைகள்' என்ற கவிதை நூலை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.

இந்தநிலையில், சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு நூற்றாண்டு விழாவில் நடிகர் விஜய்சேதுபதி கலந்து கொண்டார். அதனை தொடர்ந்து விழா நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி பேசியதாவது:-

விடுதலை போராட்ட வீரர் நல்லகண்ணுவின் வாழ்க்கை வரலாறு, பாடப்புத்தகத்தில் இடம்பெற வேண்டும். காலில் செருப்பு, தீபாவளி, பொங்கல் போனஸ், 8 மணி நேர வேலை, இதெல்லாம் நல்லகண்ணு போன்றவர்கள் ரத்தம்சிந்தி பெற்றுத் தந்தது. இது பற்றி தெரியாத பலரில் நானும் ஒருவன்; இதனால் பலனடைந்த பலர்களிலும் நானும் ஒருவன் என்றார்.


Next Story