கல்வித் தரத்தை உயர்த்தவே ஆல்-பாஸ் முறை ரத்து - அண்ணாமலை


கல்வித் தரத்தை உயர்த்தவே ஆல்-பாஸ் முறை ரத்து - அண்ணாமலை
x

தரமான கல்வி கொடுப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என அண்ணாமலை தெரிவித்தார் .

சென்னை,

சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாவது ,

கல்வித் தரத்தை உயர்த்தவே ஆல்-பாஸ் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது .1980களில் எல்லா குழந்தைகளும் பள்ளிக்கு வரவேண்டும் என்பதற்காக ஆல்-பாஸ் முறை கொண்டுவரப்பட்டது. ஆனால் 2024-ல் எல்லா குழந்தைகளும் பள்ளிக்கு வந்து, அடிப்படைக் கல்வியை படிக்க வேண்டும். அதனால்தான் மத்திய அரசு ஆல்-பாஸ் ரத்து திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.

தரமான கல்வி கொடுப்பதை உறுதிப்படுத்த வேண்டும். கல்வியின் தரம் உயர வேண்டும். தமிழகத்தில் கல்வியின் தரம் குறைந்துள்ளது மறுக்க முடியாத உண்மை; ஆந்திரா, தெலங்கானா, கேரளாவில் கல்வியின் தரம் உயர்ந்து வருகிறது அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் படிக்கின்றனர்; ஆனால் தரமாக படிக்கின்றனரா?.என தெரிவித்தார் .


Next Story