நீலகிரியில் தலையில் துண்டுடன் உலா வந்த காட்டு யானை
நீலகிரியில் தலையில் துண்டுடன் காட்டு யானை உலா வந்தது.
நீலகிரி,
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே அய்யன்கொல்லி, மூலைக்கடை, கோட்டப்பாடி, படச்சேரி பகுதிகளில் காட்டுயானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இந்த யானைகள் அய்யன்கொல்லியில் இருந்து மழவன்சேரம்பாடி, கொளப்பள்ளி வழியாக பந்தலூர் மற்றும் கூடலூர் செல்லும் வாகனங்களை வழிமறித்து வருகிறது.
இந்த நிலையில் அய்யன்கொல்லி பகுதிக்குள் புகுந்த காட்டு யானை அங்கு ஒரு வீட்டில் காயப்போட்டிருந்த துண்டை துதிக்கையால் எடுத்து தலையில் போட்டுக்கொண்டு, அந்த பகுதியில் உலா வந்தது. இந்த காட்சி அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Related Tags :
Next Story