'தள்ளாடிக் கொண்டிருக்கும் தமிழகத்திற்கு கைத்தடி தேவைப்படுகிறது' - தமிழிசை சவுந்தரராஜன்


தள்ளாடிக் கொண்டிருக்கும் தமிழகத்திற்கு கைத்தடி தேவைப்படுகிறது - தமிழிசை சவுந்தரராஜன்
x
தினத்தந்தி 25 Dec 2024 10:08 PM IST (Updated: 25 Dec 2024 10:18 PM IST)
t-max-icont-min-icon

தள்ளாடிக் கொண்டிருக்கும் தமிழகத்திற்கு கைத்தடி தேவைப்படுகிறது என்று தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

சென்னை,

சென்னையில் பா.ஜ.க. சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த தின நூற்றாண்டு விழா இன்று நடைபெற்றது. இதில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முன்னாள் எம்.பி. சரத்குமார், நயினார் நாகேந்திரன் மற்றும் எச்.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசியபோது தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது;-

"அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது. நாங்கள் பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக திட்டங்களை தீட்டிக் கொண்டிருக்கிறோம், ஆனால் இங்கு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் இருக்கிறது.

தமிழகம் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. நேற்று தொலைக்காட்சியில் பார்த்தேன், ஆசிரியர் வீரமணி ஒரு கைத்தடியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கொடுத்தார். இது திராவிட மாடலின் அடையாளம் என்று முதல்-அமைச்சர் மிகவும் சந்தோஷப்பட்டார். ஆனால் நான் சொல்கிறேன், தள்ளாடிக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டிற்கு இன்று கைத்தடி தேவைப்படுகிறது என்று வீரமணியே கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார்.


Next Story