மர்ம காய்ச்சலுக்கு 9 மாத குழந்தை பலி


மர்ம காய்ச்சலுக்கு 9 மாத குழந்தை பலி
x

கோப்புப்படம் 

திருவள்ளூரில் மர்ம காய்ச்சலுக்கு 9 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர்,

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அருண்பிரசாத் (31 வயது), இவர் மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கத்தில் குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில் மணப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் உதவி மேலாளராக பணி செய்து வருகிறார். இவருக்கு அகிலன் என்ற 9 மாத குழந்தை இருந்தது. குழந்தை அகிலன் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார்.

இதையடுத்து மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தையை சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் குழந்தைக்கு வலிப்பு ஏற்பட்டது. இதனால் அங்கிருந்து போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு மருத்துவ பரிசோதனையில் குழந்தை உயிரிழந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து மதுரவாயல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story