8-ம் ஆண்டு நினைவு தினம்: ஜெயலலிதா நினைவிடத்தில் 5-ந்தேதி அ.தி.மு.க.வினர் அஞ்சலி


8-ம் ஆண்டு நினைவு தினம்: ஜெயலலிதா நினைவிடத்தில் 5-ந்தேதி அ.தி.மு.க.வினர் அஞ்சலி
x

முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா 8-ஆம் ஆண்டு நினைவு தினம் வரும் 5 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது

சென்னை,

அ.தி.மு.க. தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

அ.தி.மு.க. முன்னாள் பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ஜெயலலிதாவின் 8-ம் ஆண்டு நினைவு நாள் அடுத்த மாதம் (டிசம்பர்) 5-ந்தேதி அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து அன்று காலை 10 மணியளவில், சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து, மலர்தூவி மரியாதை செலுத்த உள்ளார். அதனையடுத்து உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

ஜெயலலிதா நினைவு நாள் அன்று, கட்சியில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் மன ஆறுதல் பெறும் வகையில், அனைத்துப் பகுதிகளிலும் ஆங்காங்கே ஜெயலலிதாவின் உருவப்படங்களை வைத்து, மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள் செய்திட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story